இரட்டைபாலி வலசு

அமைவிடம் - இரட்டைபாலி வலசு
ஊர் - இரட்டைபாலி வலசு
வட்டம் - திண்டல்
மாவட்டம் - ஈரோடு
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
விளக்கம் -

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே உள்ள இரட்டைபாலிவலசு என்ற கிராமத்தில் கல்வட்டத்தின் நடுவே சுமார் 20 அடி உயரங்கொண்ட நெடுங்கல் ஒன்று உள்ளது. இது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெருங்கற்கால ஈமச்சின்னம் ஆகும். பெருங்கற்கால ஈமச்சின்னம் என்பது செயற்கரியன செய்து இறந்துபட்ட ஒருவரின் உடலையோ அல்லது ஈமப்பொருட்களையோ புதைத்து அதன் மேல் பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும் அமைப்பாகும். மேற்கண்ட இந்த நெடுங்கல் பெருங்கற்காலத்தில் இறந்துபட்ட இனக்குழுவைச் சேர்ந்த தலைவனுக்காக எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

இரட்டைபாலிவலசு என்னுமிடத்தில் காணப்படும் நெடுங்கல் கொங்கு நாட்டின் பிறபகுதிகளில் காணப்படுகின்ற நெடுங்கற்களை விட நடுத்தர உயரங் கொண்டதாக உள்ளது. நெடுங்கல்லின் மேற்பகுதி கூர்முனையின்றி அமைந்துள்ளது. பொதுவாக நெடுங்கற்களின் மேல்பகுதி கூராக இருப்பது இயல்பு.